°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
முத்துலாபுரம் ஊராட்சியில் மது விற்பனை, சீட்டாட்டத்தை தடுக்கும் நடவடிக்கை அவசியம்
Tamilnadu

முத்துலாபுரம் ஊராட்சியில் மது விற்பனை, சீட்டாட்டத்தை தடுக்கும் நடவடிக்கை அவசியம்

0.0 views
Text Size:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா முத்துலாபுரம் ஊராட்சியில் உரிய அனுமதியின்றி மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா முத்துலாபுரம் ஊராட்சியில் உரிய அனுமதியின்றி மனமகிழ் மன்றம் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளனர்.

சின்னமனூர்-இரசக்கநாயக்கனூர் சாலையில் முத்துலாபுரம் விளக்கில் உள்ள இந்த மனமகிழ் மன்றம், உரிய அனுமதிகள் மற்றும் பாதுகாப்புகள் இன்றி செயல்பட்டு வருகிறது. மேலும், இது போதிய இடவசதியின்றி செயல்படுவதுடன், மது அருந்துதல் மற்றும் சீட்டாட்டம் போன்ற செயல்பாடுகள் மட்டும் நடப்பதாக கூறப்படுகிறது.

இந்த மனமகிழ் மன்றத்திற்கு ஊராட்சி நிர்வாகத்திடம் இருந்து எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை. பொதுமக்கள் இந்தச் சூழ்நிலையை கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனால், மது விற்பனை மற்றும் சீட்டாட்டத்தை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்துலாபுரம் ஊராட்சி நிர்வாகமும் கிராம பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.

உள்ளாட்சி நிர்வாகம் குறித்த புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமா என்பதை பொது மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இதனால், மது விற்பனை மற்றும் சீட்டாட்டத்தை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்துலாபுரம் ஊராட்சி நிர்வாகமும் கிராம பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.