°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
இடிந்த வீட்டை புதிதாக கட்ட அரசு உதவி கோரிய மூதாட்டி
Tamilnadu

இடிந்த வீட்டை புதிதாக கட்ட அரசு உதவி கோரிய மூதாட்டி

0.0 views
Text Size:

வீட்டின் அவல நிலையை கருத்தில் கொண்டு, உயிர்சேதம் ஏற்படும் முன்னர், இந்த வீட்டை இடித்து, அரசு வீட்டு திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்ட உதவி செய்ய வேண்டும் என கல்யாணி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தேனி மாவட்டம், போடி தாலுகா, நாகலாபுரம் ஊராட்சி, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 60 வயதான கல்யாணி மற்றும் அவருடைய குடும்பம் வீடு சேதமடைந்த நிலையில் மழையால் பெரும் அவலத்தை சந்தித்து வருகின்றனர். மகள் ஜானகி, மகன் கருப்பசாமி, மருமகள் செல்வி, பேத்தி பவித்ரா, மற்றும் மாற்றுத்திறனாளி மகன் தர்மராஜ் உட்பட ஆறு பேர் இந்த இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்கள்.

தற்போது மழைக்காலம் என்பதால் வீடு மேலும் சேதமடைந்து, வீட்டுக்குள் தண்ணீர் ஆறுபோல் பாய்ந்து, அவர்கள் தூங்க கூட முடியாத நிலையில் இருக்கின்றனர். வீட்டின் அவல நிலையை கருத்தில் கொண்டு, உயிர்சேதம் ஏற்படும் முன்னர், இந்த வீட்டை இடித்து, அரசு வீட்டு திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்ட உதவி செய்ய வேண்டும் என கல்யாணி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

இது சம்பந்தமாக, அரசு உடனடி நடவடிக்கை எடுத்து, கல்யாணியின் குடும்பம் பாதுகாப்பாக வாழுவதற்கு தேவையான உதவியை செய்ய வேண்டும் என பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.