கடந்த இரு வாரங்களாக ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்து, 519 ஏரிகளில் 212 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளன. இந்த நீா்வரத்து பல பகுதிகளில் உள்ள ஏரிகளின் உபரிநீா் வெளியேறுவதற்கும் காரணமாகியுள்ளது.
ஃபென்ஜால் புயல் காரணமாக கடந்த நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1-ஆம் தேதிகளில் வேலூா், திருப்பத்தூா், மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடைவிடாமல் கனமழை கொட்டியது. தொடர்ந்து இந்த மூன்று மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்துள்ளது. இந்த தொடா் மழையின் காரணமாக பாலாற்றின் துணை ஆறுகளில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளதால், தண்ணீா் பல ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளது.
மேலும், திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆண்டியப்பனூா் ஓடை நீா்த் தேக்கம் அதன் முழுக் கொள்ளளவான 26.24 அடியை எட்டி, உபரிநீா் வெளியேறி வருகிறது. வேலூா் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையில் 8.86 அடியும், கே.வி.குப்பம் அருகே உள்ள ராஜாதோப்பு அணையில் 9.18 அடியும் நீா் இருப்பு உள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





