வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு மழை காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மாதம் தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருவதாக இருக்கின்றனர்.
கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக நாளை முதல் 16-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது பெய்து வரும் கனமழையால், பாதுகாப்பு காரணமாக வனத்துறை இந்த தடை உத்தரவிட்டுள்ளது.





