உத்தரப்பிரதேசத்தின் மதுரா, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் பூர்வீகத் தளமாக திகழ்கிறது. ஸ்ரீகிருஷ்ணரின் புண்ணிய பூமியாக கருதப்படும் மதுராவில், ஹோலி திருவிழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.
இன்று ராமன்ரேதி ஆசிரமத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டு, மலர்களும் வண்ணங்களும் கொண்டு ஹோலி விளையாடினர். பாரம்பரிய பஜனை, கீர்த்தனை, பக்திப் பாடல்களுடன் தொடங்கிய இந்த விழாவில், பக்தர்கள் மலர்களை தூவி இறையருளைப் பெற்றனர்.
பின்னர், நிறமுறை ஹோலி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் வண்ணப்பொடியை பரிமாறி, கிருஷ்ணரின் பாணியில் ஆனந்தமாக ஹோலி கொண்டாடினர். சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆன்மீக நிகழ்வுகளும் இந்த ஹோலி திருவிழாவின் முக்கிய சிறப்புகளாக அமைந்தன.
மதுரா-வின் ஹோலி, இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் கலாச்சார விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பக்தர்களின் பல்லாயிரக்கணக்கான திரளான பங்கேற்பு மற்றும் வண்ணங்கள், பக்தி, ஆன்மீக நெகிழ்ச்சி கலந்து மிளிர்ந்த இந்த விழா, அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.





