°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
அதிமுகவை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை: செங்கல்பட்டு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
Lok Sabha

அதிமுகவை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை: செங்கல்பட்டு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

0.0 views
Text Size:

அதிமுக தலைவர் மேலும் கூறுகையில், “இன்றைய சூழலில் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு குறைபாடுகள், ஊழல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் மக்களை பாதித்துக்கொண்டு வருகின்றன.

செங்கல்பட்டில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உரையாற்றினார். “தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான் உண்மையான பொற்காலம். திருமண உதவி திட்டத்தில் தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள் உள்ளிட்ட பல சாதனைகள் எங்கள் ஆட்சியில்தான் நடைபெற்றன. 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியாக வலுவாக நிற்கிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பல்வேறு கட்சிகள் பதட்டத்தில் உள்ளன” என அவர் தெரிவித்தார்.

அதிமுக தலைவர் மேலும் கூறுகையில், “இன்றைய சூழலில் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு குறைபாடுகள், ஊழல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் மக்களை பாதித்துக்கொண்டு வருகின்றன. இவற்றுக்கு தீர்வு தரும் நாள் தேர்தல் நாள் தான். மக்களெல்லாம் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவாக்கிய அதிமுகவையே ஆதரிக்க வேண்டும். திரைப்படத்துறையிலிருந்து அரசியலுக்கு வருபவர்கள் உடனடியாக முதலமைச்சராக முடியாது. எம்.ஜி.ஆர். கூட கட்சியை ஆரம்பித்த பின் 5 ஆண்டுகள் கடுமையாக உழைத்து மக்கள் சேவையால் ஆட்சிக்கு வந்தார். எனவே 54 ஆண்டுகளாக தமிழகத்தில் மக்களுக்காக உழைத்த அதிமுகவை விமர்சிப்பதற்கு யாருக்கும் தகுதி இல்லை” என வலியுறுத்தினார்.

மேலும் அவர், “நல்லாட்சியை உருவாக்குவோம், நல்லவர்களோடு செல்லுவோம். வாக்குப்பதிவில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

இந்த நிகழ்வில் முன்னதாக மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு வெள்ளிச் செங்கோல் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் சின்னையா, துணைச் செயலாளர் நாவலூர் முத்து, செயற்குழு உறுப்பினர் கனிதாசம்பத், காட்டாங்கொளத்தூர் ஒன்றியச் செயலாளர்கள் சம்பத்குமார், குணசேகரன், கஜா, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகரச் செயலாளர் சீனிவாசன், மறைமலை நகர் நகரச் செயலாளர் ரவீகுமார், செங்கல்பட்டு நகரச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகக் கோஷங்களுடன் அதிமுக தலைவருக்கு ஆதரவு தெரிவித்தனர். மாநில அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, வரவிருக்கும் தேர்தலில் மக்களிடம் நேர்மையான ஆட்சி மற்றும் முன்னேற்றத்தை வழங்கும் வாக்குறுதியை அளித்தார். 

செங்கல்பட்டில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.

அதிமுகவை விமர்சிக்க யாருக்கும் தகுதி இல்லை: செங்கல்பட்டு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு