°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
18 ஆண்டுகளுக்குப் பின் கையெழுத்தான இந்தியா ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
ECONOMY

18 ஆண்டுகளுக்குப் பின் கையெழுத்தான இந்தியா ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

0 views
Text Size:

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் தயாரிக்கப்படும் மருத்துவ சாதனங்கள், புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையும் குறையும் வாய்ப்பு உள்ளது.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் இறுதியாக வெற்றியடைந்து, டெல்லியில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார உறவுகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர்லெயன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் சுமார் 96 சதவீத பொருட்களின் இறக்குமதி வரி படிப்படியாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய சந்தையில் பல ஐரோப்பிய தயாரிப்புகளின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பென்ஸ், ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ போன்ற உயர் தர கார்கள் மீது தற்போது 100 சதவீதத்துக்கும் மேலாக உள்ள இறக்குமதி வரி, இந்த ஒப்பந்தத்தின் கீழ் 40 சதவீதமாக குறைக்கப்படும்.

அதேபோல், ஐரோப்பிய வைன்களுக்கு விதிக்கப்படும் 150 சதவீத இறக்குமதி வரி, பாதியாக குறைக்கப்பட்டு 75 சதவீதமாக மாற்றப்படும். இதன் மூலம் இந்திய சந்தையில் வைன்களின் விலை குறையும் என கூறப்படுகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் தயாரிக்கப்படும் மருத்துவ சாதனங்கள், புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையும் குறையும் வாய்ப்பு உள்ளது. தற்போது மருந்துப் பொருட்களுக்கு விதிக்கப்படும் 11 சதவீதம் வரை உள்ள வரிகள், படிப்படியாக நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான உதிரிப்பாகங்கள், மொபைல் போன்கள், உயர் தொழில்நுட்ப மின்னணு உபகரணங்கள், ரசாயன பொருட்கள் மற்றும் இயந்திர உபகரணங்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரிகளை முழுமையாக நீக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதன் காரணமாக இந்தப் பொருட்களின் விலையும் எதிர்காலத்தில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஆலிவ் எண்ணெய் மீது விதிக்கப்படும் 45 சதவீத வரி, பூஜியம் சதவீதமாகக் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் ரயில்வே, கப்பல் தயாரிப்புகள், பொம்மைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் நகைகள் உள்ளிட்ட பல துறைகளிலும் வரி சலுகைகள் வழங்கப்படும். இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி 2032 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக அதிகரிக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் கணிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் கையெழுத்திட்ட இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முதலீட்டுக்கும், நுகர்வோருக்கு விலை குறைவு என்ற வகையிலும் பெரும் பயனை அளிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் கையெழுத்திட்ட இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், முதலீட்டுக்கும், நுகர்வோருக்கு விலை குறைவு என்ற வகையிலும் பெரும் பயனை அளிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

18 ஆண்டுகளுக்குப் பின் கையெழுத்தான இந்தியா ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்