ஆர்டிபி இன்ப்ராஸ்ட்ரக்சர் அண்ட் பவர் லிமிடெட் (RDB Infrastructure and Power Limited) என்பது 1981ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் மற்றும் சூரிய சக்தி மின்துறையில் செயல்படும் முக்கிய நிறுவனமாகும். மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் போன்ற நகரங்களில் குடியிருப்பு, ஷாப்பிங் மால்கள், அலுவலக இடங்களை எளிதில் நிர்மாணிக்கும் திறனைக் கொண்டுள்ள இந்நிறுவனம், சமீபத்தில் சூரிய சக்தி மின்திட்டங்களையும் மேற்கொண்டு வருகிறது.
நிறுவனத்தின் நிதி நிலை மிகவும் சிறந்தது. கடந்த ஜூன் காலாண்டில் ரூ.30.70 கோடியும், செப்டம்பர் காலாண்டில் ரூ.32.49 கோடியும் வருவாய் பெற்றுள்ளது. நிகர லாபம் கடந்த காலங்களில் உயர்ந்துள்ளது, மேலும் நிறுவனம் 2 புதிய வர்த்தக ஒப்பந்தங்களை பெற்றுள்ளதன் மூலம், தனது வளர்ச்சியை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனம், தற்போது 10:1 பங்கு பிரிப்பை அறிவித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு ரூ.10 முகமதிப்புள்ள பங்கு, ரூ.1 மதிப்புள்ள 10 பங்குகளாக பிரிக்கப்படவுள்ளது. இதன் மூலம், நிறுவனத்தின் பணப்புழக்கத்தை அதிகரித்து, முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கத்தில் இருக்கிறது.
மும்பை பங்குச் சந்தையில், ஆர்டிபி இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்கு விலை ஏற்றம் கண்டுள்ளது. கடந்த ஒராண்டில் 555% லாபம் மற்றும் 5 ஆண்டுகளில் 3,140% லாபம் ஏற்படுத்தியுள்ள நிறுவனம், தனது பங்குகளின் விலையை மேலும் உயர்த்தியுள்ளதன் மூலம், முதலீட்டாளர்களுக்கு உயர்ந்த ஆதாயத்தை வழங்கியுள்ளது.
பொதுமக்கள் மொத்த பங்குகளின் 29.58% ஐ வைத்திருப்பதாகவும், பங்கு பிரிப்பின் பிறகு இது வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது.





