°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
UPI பரிவர்த்தனை வளர்ச்சி: 15,547 கோடி பரிவர்த்தனை! பணத்தை விட்டு UPI-ஐ நாடும் மாக்கள்!
Market

UPI பரிவர்த்தனை வளர்ச்சி: 15,547 கோடி பரிவர்த்தனை! பணத்தை விட்டு UPI-ஐ நாடும் மாக்கள்!

0.0 views
Text Size:

இந்தியாவில், பேட்டிக்கடை முதல் பெரிய மால்கள் வரை அனைத்தும் டிஜிட்டல் பேமெண்ட்களை ஏற்றுக் கொள்வதால், UPI (யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) அபார வளர்ச்சியை அடைந்துள்ளது.

கணிசமான காலமாக ரொக்கப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்தியாவில், பேட்டிக்கடை முதல் பெரிய மால்கள் வரை அனைத்தும் டிஜிட்டல் பேமெண்ட்களை ஏற்றுக் கொள்வதால், UPI (யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்) அபார வளர்ச்சியை அடைந்துள்ளது. 2024-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரை, UPI மூலம் 15,547 கோடி பரிவர்த்தனைகளில் ரூ.223 லட்சம் கோடி மதிப்பில் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது இந்தியாவில் நிதி அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பகிர்ந்த தகவலாகும்.

இதனுடன், UPI பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், UPI பரிவர்த்தனைகள் உலகளவில் அங்கீகாரம் பெற தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியா தொடங்கி, துபாய், சிங்கப்பூர், பூட்டான், நேபாளம், இலங்கை, பிரான்ஸ், மொரிசியஸ் போன்ற 7 நாடுகளில் UPI செயல்படுகிறது.

UPI 2016-ஆம் ஆண்டு, நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. பல வங்கி கணக்குகளை ஒரே மொபைல் பிளாட்பார்மில் இணைத்து, இந்தியாவின் கட்டண முறையில் ஒரு பெரிய புரட்சியை உருவாக்கியது. UPI பயனர்களுக்கு உடனடி பணப்பரிவர்த்தனைகளை எளிதில் செய்திட உதவுகிறது.

இந்தியாவில், UPI நம்பரின் மூலம் வணிகர்கள் கடன் செலுத்துவது, தொலைபேசி எண் மூலம் பணம் அனுப்புவது என, வங்கிக்கு சென்று பணப்பரிவினை செய்வதை முற்றிலும் குறைத்து வருகிறது. இது இந்தியாவின் பணமில்லா பொருளாதார நோக்கின் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 2024-ஆம் ஆண்டில் மட்டும், 16.58 பில்லியன் பரிவர்த்தனைகளை UPI தளம் செயல்படுத்தி, ரூ.23.49 லட்சம் கோடி மதிப்பில் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இதன் மூலம் 2024-ஆம் ஆண்டில், 2023-ஆம ஆண்டு விட 45% அதிகரித்துள்ளது. UPI அன்றாடத் தேவைகளைச் செய்து தருவதுடன், மக்கள் வீடுகளிலிருந்தே பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் உதவுகிறது.

இந்த வளர்ச்சி, இந்தியாவின் கட்டண முறையில் மாற்றத்தை உருவாக்கி, உலக அளவில் மிகப்பெரிய டிஜிட்டல் பேமென்ட் பரிவர்த்தனை அமைப்பாக UPI ஐ நிலைநாட்டியிருக்கிறது.

இந்த வளர்ச்சி, இந்தியாவின் கட்டண முறையில் மாற்றத்தை உருவாக்கி, உலக அளவில் மிகப்பெரிய டிஜிட்டல் பேமென்ட் பரிவர்த்தனை அமைப்பாக UPI ஐ நிலைநாட்டியிருக்கிறது.