°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
'நரி வேட்ட' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு - டோவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில்!
MALAYALAM

'நரி வேட்ட' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு - டோவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில்!

0.0 views
Text Size:

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், பல படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களை அற்புதமாக ஆக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், பல படங்களில் விதவிதமான கதாபாத்திரங்களை அற்புதமாக ஆக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். 'மாரி', 'மின்னல் முரளி' போன்ற படங்களின் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் ஆகிய டோவினோ, தற்போது பிருத்விராஜ் இயக்கத்தில் எல் 2 எம்புரான் படத்தில் நடித்து வருகிறார்.


இவர் தற்போது அனுராஜ் மனோகர் இயக்கத்தில் புதிய படம் 'நரி வேட்ட' படத்தில் நடித்து வருகிறார். உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில், தமிழில் பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன் மற்றும் மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் மூலம், சேரன், மலையாளத்தில் தனது முதல் படத்தில் நடிக்கிறார்.


இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, டோவினோ தாமஸின் பிறந்த நாளை முன்னிட்டு, படக்குழு வெளியிட்டுள்ளது. 'நரி வேட்ட' படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தற்போது அனுராஜ் மனோகர் இயக்கத்தில் புதிய படம் 'நரி வேட்ட' படத்தில் நடித்து வருகிறார்.

'நரி வேட்ட' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு - டோவினோ தாமஸ் முக்கிய கதாபாத்திரத்தில்!