பெரு நாட்டின் ஹுவான்கேயோ பகுதியில் நிகழ்ந்த துயரச் சம்பவம், உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்றில் மின்னல் தாக்கியதில் 39 வயது வீரர் ஜோஸ் ஹியுகோ டி லா குரூஸ் மிஜா உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில்கா மாவட்டத்தில் உள்ள கோடோ கோடோ மைதானத்தில் பெல்லாவிஸ்டா மற்றும் சோக்கா அணிகள் இடையே போட்டி நடைபெற்று வந்தது. 22 நிமிடங்கள் முடிந்தபோது, பெல்லாவிஸ்டா அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
அந்நேரத்தில் திடீரென மின்னல் தாக்கி மைதானத்தில் இருந்த விளையாட்டு வீரர்கள் திடீரென கீழே விழுந்தனர். இச்சம்பவத்தில் குரூஸ் மிஜா கடுமையாக பாதிக்கப்பட்டு மைதானத்தில் நிலைக்குப் பின் விழுந்தார். அவர் மீது மின்னல் தாக்கிய போது தீப்பற்றுவது போன்ற காட்சிகள் பதிவானது, மேலும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. குரூஸ் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த தாக்குதலில் மேலும் சில வீரர்கள் காயமடைந்துள்ளனர். 40 வயதான கோல்கீப்பர் ஜுவான் சோக்கா லேக்டா தற்காலிகமாக பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். மின்னல் தாக்கியபோது குரூஸ் கையில் உலோக பிரேஸ்லெட் அணிந்திருந்தார், இது மின்னலை அவரது மீது ஈர்த்திருக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் பெரு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹுவான்கேயோ நகராட்சி, குரூஸ் மிஜாவின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, காயமடைந்த மற்ற வீரர்களின் மீட்பிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது. இது போன்ற விபத்துகளைத் தவிர்க்கும் விதமாக மைதானங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் காலத்தில் பிற நாடுகளிலும் நிகழ்ந்துள்ளன. இந்தோனேசியாவில் 2023 பிப்ரவரியில் நடந்த கால்பந்து போட்டியிலும் இவ்வாறான மின்னல் தாக்குதலில் 30 வயதான செப்டன் ரஹஜா என்பவர் பலியானார். 25 ஆண்டுகளுக்கு முன் காங்கோவில் மின்னல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தது, இதில் பலர் பார்வையாளர்களாக இருந்தனர்.





