இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பவுலரான ரவிச்சந்திரன் அஷ்வின், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரின் நடுவே தனது ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார். இது மைதானத்தில் எம்.எஸ். தோனி பாணியில் செயல்பட்டதாகவும் கருதப்படுகின்றது.
அஷ்வின், அதிர்ச்சியான முறையில் தனது ஓய்வை அறிவித்ததன் மூலம், அடிலெய்டு டெஸ்ட் போட்டி தான் அவரது கடைசி சர்வதேச போட்டியாக அமைந்தது. இந்த முடிவு, அவரது வெற்றிகரமான கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.



