°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
ஹாலிவுட் புகழ் பெற்ற இயக்குநர் டேவிட்  காலமானார்!
CINEMA

ஹாலிவுட் புகழ் பெற்ற இயக்குநர் டேவிட் காலமானார்!

0.0 views
Text Size:

1990-ம் ஆண்டு வைல்ட் அட் ஹார்ட் படத்திற்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம் டி'ஓர் (Palme d'Or) விருது பெற்றார்.

பிரபல ஹாலிவுட் இயக்குநர் டேவிட் லின்ச், 78 வயதினில் எம்பைசிமா எனப்படும் நுரையீரல் நோயால் மரணமடைந்துள்ளார். அவர் தந்த அறிவிப்பு அவரது குடும்பத்தினரின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. "இப்போது அவர் எங்களுடன் இல்லாததால் உலகில் ஒரு பெரிய ஓட்டை உருவாகியுள்ளது. ஆனால், அவர் சொல்வது போல், உங்கள் கண்ணை டோனட்டின் மீது வைத்திருங்கள், ஓட்டை மீது அல்ல" என்ற உரை அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.


டேவிட் லின்சின் டுவின் பீக் தொடர் மூன்று கோல்டன் குளோப்ஸ், 2 எம்மிகள் மற்றும் அதன் இசைக்காக ஒரு கிராமி விருதையும் வென்றது. மேலும், புளூ வெல்வெட் படத்திற்கு ஆஸ்கர் பரிந்துரைக்கப்பட்டார். 1990-ம் ஆண்டு வைல்ட் அட் ஹார்ட் படத்திற்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம் டி'ஓர் (Palme d'Or) விருது பெற்றார். 2019ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளருக்கான அகாடமி விருதைப் பெற்றார்.


லின்சின் மறைவுக்கு பல ஹாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். டுவின் பீக் தொடரின் நட்சத்திரமான நிக்கோலஸ் கேஜ், "நான் சினிமாவை காதலிக்க முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்தவர்" என்றார். திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், "தனித்துவமான, தொலைநோக்கு சிந்தனைக் கொண்ட இயக்குநர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


லின்சின் கலை மற்றும் படைப்புகளின் பாதிப்பு திரைப்படத் துறையில் நிரந்தரமாக வாழ்ந்துவரும்.

டுவின் பீக் தொடரின் நட்சத்திரமான நிக்கோலஸ் கேஜ், "நான் சினிமாவை காதலிக்க முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்தவர்" என்றார்.

ஹாலிவுட் புகழ் பெற்ற இயக்குநர் டேவிட் காலமானார்!