90-களின் மாஸ் ஹீரோவாக அறியப்பட்ட நடிகர் ஜாக்கி சான், தற்போது 'எ லெஜெண்ட்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம், 2017-ல் வெளியான 'தி மித்' படத்தின் தொடர்ச்சியாக உருவாகி உள்ளது, மேலும் குங்பூ யோகா படங்களின் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை ஸ்டான்லி டாங் இயக்கியுள்ளார். ஜாக்கி சானுடன், லே சாங், நா ஜா, ஆரிப் லீ, லி சென், பெங் சியோவ்ரான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் ஜாக்கி சான், இளமையான போர்வீரன் மற்றும் தற்போதைய தோற்றத்தில் ஆராய்ச்சியாளராக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதற்காக, 20 வயதான அவரது தோற்றத்தை உருவாக்க ஏ.ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த படத்தில் பரபரப்பான சண்டை காட்சிகள், சாகசங்கள், மற்றும் கற்பனைக்கு எட்டாத காட்சிகள் உள்ளன. படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் பிலிம்ஸ் வெளியிடுகிறது. இத்திரைப்படம் வரும் ஜனவரி 3-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது, எதிர்பார்ப்பு மிகுந்தது.





