'சூப்பர் மேன்' கதாபாத்திரம், காமிக்ஸ் உலகில் புகழ்பெற்ற மற்றும் உலகம் முழுவதும் பெரும் ரசிகர்களைப் பெற்றது. 1970-களில் முதல் திரைப்படமாக உருவான இந்த கதாபாத்திரம், தொடர்ந்து பல படங்களில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஹென்றி கெவில் டிசி படங்களில் சூப்பர் மேனாக நடித்திருந்தார். ஆனால், டிசி காமிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு அவர் டிசி இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், 'கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி' படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன், தற்போது டிசி நிறுவனத்துக்காக புதிய 'சூப்பர் மேன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில், டேவிட் கோரன்ஸ்வெட் சூப்பர் மேனாக நடிக்கின்றார், மற்றும் நிக்கோலஸ் ஹோல்ட் வில்லனாக நடித்துள்ளார்.
ஜேம்ஸ் கன் தனது எக்ஸ் பக்கத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார், இதில் இப்படம் அடுத்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி வெளியாவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டைட்டில் ரீசர் வரும் 19-ஆம் தேதி வெளியாகும் என அவர் அறிவித்துள்ளார். 'சூப்பர் மேன்' படத்தை டிசி நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்கிய ஜேம்ஸ் கன், இதன் மூலம் தனது முதலாவது டிசி படத்தை இயக்குகிறார். இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளதோடு, உலகம் முழுவதும் இதன் மீதான ஆர்வம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது.





