பிரபல மலையாள எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குனர் எம். டி. வாசுதேவன் நாயர் (91) நேற்று இரவு இதய செயலிழப்பால் கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
வாசுதேவன் நாயர், மலையாள இலக்கியம் மற்றும் திரைப்படத்துறையில் மிகுந்த பங்களிப்பு செய்தவர். அவர் எழுதிய படைப்புகள் தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1996-ஆம் ஆண்டில், இந்தியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீடம் விருதை பெற்றார்.
அவர் சிறந்த திரைக்கதைக்காக 4 தேசிய விருதுகளை வென்றுள்ளார். வாசுதேவன் நாயர் மலையாள திரையுலகில் மிக முக்கியமான ஸ்கிரிப்ட் ரைட்டர் மற்றும் இயக்குனராக இருந்தார். அவரது மறைவால், இந்திய இலக்கியம் மற்றும் திரையுலகம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. திரையுலகினரும், இலக்கிய பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வாசுதேவன் நாயரின் படைப்புகள் மற்றும் திரைப்பணிகள் எப்போதும் மக்களிடையே வாழ்ந்து, எந்நாளும் கவுரவப்படுத்தப்படுவார்.


