நடிகர் ஆசிப் அலி, 'கிஷ்கிந்தா காண்டம்' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, திரில்லர் படங்களில் தனது கலைத் திறமையை மீண்டும் வெளிப்படுத்தி புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பெயர் 'ரேகாசித்திரம்'. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அனஸ்வர ராஜன் நடித்துள்ளார். ஆசிப் அலி, தனது கடந்த இரண்டு படங்களான 'கூமன்: தி நைட் ரைடர்' மற்றும் 'தளவன்' படங்களுக்குப் பிறகு, இந்த படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
'ரேகாசித்திரம்' படத்தில், இந்திரன்ஸ், நிஷாந்த் சாகர், ஜரின் ஷிஹாப், சித்திக் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஜோபின் டி சாக்கோ இயக்கியுள்ளார், அவர் மம்முட்டி நடித்த 'தி ப்ரீஸ்ட்' படத்தில் பணியாற்றியவர். இந்த படம் ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியானதும் அது இணையத்தில் வைரலாக பரவியது. தற்போது, 'ரேகாசித்திரம்' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 2025 ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.


