இந்தியாவின் துணிச்சலான சிறுவர்கள் மற்றும் இளம் விளையாட்டு வீரர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், பிரதமரின் தேசிய பாலர் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது இந்திய ராணுவ வீரர்களுக்கு மனிதநேய உதவி செய்த சிறுவனின் செயல் நாடு முழுவதும் பாராட்டைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, எல்லைப் பகுதியில் பணியாற்றிய இந்திய ராணுவ வீரர்களுக்கு அந்த சிறுவன் பால், தேநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவினார். குறைந்த வயதிலும் நாட்டுப்பற்றும் துணிச்சலும் வெளிப்படுத்தியதற்காக, அவருக்கு பிரதமரின் தேசிய பாலர் விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது, சிறுவனின் தாயார் மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டது. குழந்தைகளின் வீரத்துணிவையும் சமூக பொறுப்பையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இதே நிகழ்ச்சியில், இளம் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில், 14 வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கும் சிறப்பு கவுரவம் அளிக்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதில் அறிமுகமான வீரராக சூர்யவன்ஷி கவனம் பெற்றுள்ளார். தனது முதல் சீசனிலேயே சதம் அடித்து, இளம் வயதில் சதமடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
விஜய் ஹசாரே தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்ததன் மூலம், தேசிய அளவிலும் அவர் கவனம் பெற்றார். 14 வயதிலேயே பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால நம்பிக்கையாக பார்க்கப்படுகிறார். இளம் வயதில் விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை ஊக்குவிக்கும் பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருது, அவரது திறமைகளுக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி, குழந்தைகளின் வீரத்துணிவு, விவேகம், சமூக சேவை மற்றும் விளையாட்டு சாதனைகளை ஒரே மேடையில் கொண்டாடிய முக்கிய தருணமாக அமைந்தது. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இளம் தலைமுறையின் சாதனைகள் அங்கீகரிக்கப்படுவதால், மற்ற குழந்தைகளுக்கும் இது ஒரு ஊக்கமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விருதுகள் மூலம், சமூக சேவை மற்றும் விளையாட்டு ஆகிய இரு துறைகளிலும் சிறுவர்கள் மற்றும் இளம் வீரர்கள் தொடர்ந்து சாதிக்க வேண்டும் என்ற செய்தி வலியுறுத்தப்பட்டுள்ளது.





