°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ- ஐரோப்பிய அமைப்புக்கு ஒத்துழைப்பு: புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது
Delhi

ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ- ஐரோப்பிய அமைப்புக்கு ஒத்துழைப்பு: புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது

0.0 views
Text Size:

ககன்யான் திட்டத்தின் நோக்கம், பூமியிலிருந்து 400 கி.மீ., தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலத்தை அனுப்பி, 2-3 விண்வெளி வீரர்களை 1 முதல் 3 நாட்கள் ஆய்வு பணியில் ஈடுபடுத்தி, பத்திரமாக பூமிக்கு மீண்டும் அழைத்து வருவதாகும்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்தில், ஒத்துழைப்பு அளிப்பதற்காக, ஐரோப்பிய விண்வெளி அமைப்புடன் இஸ்ரோ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

2023ம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி, இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது. இதன் மூலம், இந்தியாவின் விண்வெளி திறன்களை உலக நாடுகள் வியந்து பாராட்டின. இந்த திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இஸ்ரோ சந்திரயான்-4 மற்றும் ககன்யான் உள்ளிட்ட பல்வேறு விண்வெளி திட்டங்களை விரைவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

ககன்யான் திட்டத்தின் கீழ், 4 இந்திய விண்வெளி வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன்கள் பிரசாந்த் நாயர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விமான கமாண்டர் சுபன்சூ சுக்லா ஆகியோர் விண்வெளிக்கு செல்ல உள்ளனர்.

ககன்யான் திட்டத்தின் நோக்கம், பூமியிலிருந்து 400 கி.மீ., தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலத்தை அனுப்பி, 2-3 விண்வெளி வீரர்களை 1 முதல் 3 நாட்கள் ஆய்வு பணியில் ஈடுபடுத்தி, பத்திரமாக பூமிக்கு மீண்டும் அழைத்து வருவதாகும். இந்த திட்டத்தை அடுத்த ஆண்டில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில், ககன்யான் திட்டத்தில் ஒத்துழைப்பு அளிப்பதற்காக, ஐரோப்பிய விண்வெளி அமைப்புடன் இஸ்ரோ புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம், ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஆய்வு நிலையங்களில் இருந்து ககன்யான் விண்கலத்தின் பயணப்பாதையை கண்காணிக்க முடியும். 

2023ம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி, இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்தது.

ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ- ஐரோப்பிய அமைப்புக்கு ஒத்துழைப்பு: புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது