இந்தூரில் இருந்து வந்த மோனலிசா, தனது குடும்பத்துடன் கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்ய வந்திருந்தார். அவளுடைய அழகான தோற்றம் பார்க்கும் அனைவரையும் கவர்ந்தது, இதனால் ஒரு யூடியூப் வீடியோ மூலம் அவள் வைரலானது. அவரது தோற்றத்திற்காக நெட்டிசன்கள் அவளுக்கு "மோனலிசா போஸ்லே" என பெயர் சூட்டினர்.
இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில காலத்திற்கு பிறகு, அவளுக்கான செல்பி இழுக்கப்படுவதை தாங்க முடியாமல், கும்பமேளாவை விட்டு தனது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். சமூக வலைதளங்களில் பரபரப்பாக பிரபலமாக மாறிய அவர், தனது யூடியூப் சேனலையும் தொடங்கி, வலைதளங்களில் பெரும் ரசிகர்களைக் கொண்டுள்ளார்.
அவருக்காக பாலிவுட் வாய்ப்பு ஒன்றும் உருவாகி உள்ளது. இயக்குநர் சனோஜ் மிஸ்ரா, "டைரி ஆப் மணிப்பூர்" படத்தில் அவளை கதாநாயகியாக நடிக்க அழைத்துள்ளார். இதற்கு முன்பு ராம் கி ஜன்மபூமி போன்ற படங்களை இயக்கிய சனோஜ், மோனலிசாவை அறிமுகப்படுத்துவதற்கு உறுதியாக இருக்கிறார்.
பாலிவுட்டில் இளம் மற்றும் திறமையான நடிகையாக திகழ விரும்பும் மோனலிசா, எதிர்காலத்தில் பெரிய மாற்றங்களை காணலாம்.


