°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
சினிமாவை விட்டு விலகும் விக்ராந்த் மாஸ்ஸி: ரசிகர்களுக்கு அதிர்ச்சி!
HINDI

சினிமாவை விட்டு விலகும் விக்ராந்த் மாஸ்ஸி: ரசிகர்களுக்கு அதிர்ச்சி!

1.0 views
Text Size:

இப்படம் பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் தலைவர்களின் பாராட்டுகளை பெற்றது, மேலும் விக்ராந்த் சினிமாவில் மேலும் உயரம் அடையப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சினிமாவில் 2013-ம் ஆண்டு லூட்டேரா திரைப்படத்தின் மூலம் அறிமுகமான விக்ராந்த் மாஸ்ஸி, பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். எ டெத் இன் தி கஞ்ச் (2017) திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிய விக்ராந்த், அதன்பிறகு ஜின்னி வெட்ஸ் சன்னி, ஹசீன் தில்ருபா, லவ் ஹாஸ்டல் மற்றும் 12-த் பெயில் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

சமீபத்தில், அவரது நடிப்பில் வெளியான தி சபர்மதி ரிப்போர்ட் படம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவானது. இப்படம் பிரதமர் மோடி மற்றும் பல அரசியல் தலைவர்களின் பாராட்டுகளை பெற்றது, மேலும் விக்ராந்த் சினிமாவில் மேலும் உயரம் அடையப்போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போதைய தகவலின் படி, விக்ராந்த் மாஸ்ஸி தனது சினிமா பயணத்தை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது சமூகவலைத்தளப் பதிவில், "கடந்த சில வருடங்கள் எனக்கு சிறப்பாக அமைந்தன. அதற்காக நன்றி. அப்பாவாக, மகனாக, மற்றும் நடிகனாக வீட்டிற்கு திரும்பும் நேரம் வந்துவிட்டது. 2025-ம் ஆண்டு நாம் ஒருவரையொருவர் கடைசியாக சந்திப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது விக்ராந்த் யார் ஜிக்ரி மற்றும் ஆன்கோன் கி குஸ்தாகியான் படங்களில் நடித்து வருகிறார். 

சமீபத்தில், அவரது நடிப்பில் வெளியான தி சபர்மதி ரிப்போர்ட் படம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவானது.

சினிமாவை விட்டு விலகும் விக்ராந்த் மாஸ்ஸி: ரசிகர்களுக்கு அதிர்ச்சி!