°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
கார்த்திக் ஆர்யன் படத்தில் கே.ஜி.எஃப் நடிகை பிரபலமான வேடத்தில்?- புதிய தகவல்
HINDI

கார்த்திக் ஆர்யன் படத்தில் கே.ஜி.எஃப் நடிகை பிரபலமான வேடத்தில்?- புதிய தகவல்

0.0 views
Text Size:

'முடாசர் அஜீஸ்' இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றது.

இந்தி திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரவீனா தாண்டன், தமிழில் அர்ஜுனின் 'சாது', கமல்ஹாசனுடன் 'ஆளவந்தான்' படங்களில் நடித்து பிரபலமானார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். 2022-ல் 'கேஜிஎப் 2' படத்தில் நடித்து வெற்றியை பெற்ற ரவீனா தாண்டன், தற்போது பாலிவுட்டில் 'வெல்கம் டு தி ஜங்கிள்' படத்தில் அக்சய் குமாருடன் நடித்து வருகிறார்.

அதே நேரத்தில், கார்த்திக் ஆர்யன் நடிக்கும் 'பதி பட்னி அவுர் வோ 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ரவீனா தாண்டன் படக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு தொடர்புடைய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்குவதற்கும், அதன் தொடர் வெற்றி குறித்து ரசிகர்களும் எதிர்பார்க்கின்றனர். 'பதி பட்னி அவுர்' படத்தின் முதல் பாகம் 2019-ல் வெளியானது, மேலும் கார்த்திக் ஆர்யன், பூமி பெட்னேகர் மற்றும் அனன்யா பாண்டே நடித்திருந்தது. 'முடாசர் அஜீஸ்' இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றது.

கார்த்திக் ஆர்யன் கடைசியாக 'புல் பூலையா 3' படத்தில் நடித்திருந்தார், அது வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. 

2022-ல் 'கேஜிஎப் 2' படத்தில் நடித்து வெற்றியை பெற்ற ரவீனா தாண்டன், தற்போது பாலிவுட்டில் 'வெல்கம் டு தி ஜங்கிள்' படத்தில் அக்சய் குமாருடன் நடித்து வருகிறார்.