பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ஆக்சன் திரில்லர் படம் 'வார்' பெரும் வெற்றியடைந்தது. டைகர் ஷ்ராப் மற்றும் வாணி கபூர் நடித்த இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்திருந்தார். தற்போது, இந்தப் படத்தின் தொடர்ச்சியான 'வார் 2' உருவாகி வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷன் மீண்டும் மேஜர் கபீர் தலிவாலாக நடிக்கின்றார், மேலும் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை இயக்குவது 'பிரம்மாஸ்திரா' பட இயக்குனர் அயன் முகர்ஜி என்பதால், இயக்கத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஹிருத்திக் ரோஷன் இணைந்து நடிக்கும் இப்படத்தில் ஆக்சன் காட்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 'வார் 2' படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக்க ஹாலிவுட் பட ஸ்டண்ட் இயக்குனர்கள் இணைந்துள்ளனர். 'வெனம்' படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய சிப்ரோ ரசாடோஸ் மற்றும் 'அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆப் அல்ட்ரா' படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் சே-யோங் ஓ ஆகியோர் இம்முறை இணைந்துள்ளனர். இந்த காட்சிகள் மும்பையில் இந்த மாத மத்தியில் தொடங்கி 15 நாட்கள் படமாக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'வார் 2' அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


