°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தைப் பற்றி தயாரிப்பாளர் வெளியிட்ட புதிய அறிவிப்பு
TELUGU

அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தைப் பற்றி தயாரிப்பாளர் வெளியிட்ட புதிய அறிவிப்பு

0.0 views
Text Size:

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 5-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா 2’ மிகப்பெரிய வெற்றியுடன் box office-ல் சாதனைகளை நிலைநாட்டியுள்ளது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 5-ம் தேதி வெளியான திரைப்படம் ‘புஷ்பா 2’ மிகப்பெரிய வெற்றியுடன் box office-ல் சாதனைகளை நிலைநாட்டியுள்ளது. இப்படத்தில் அலு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத்பாசில் நடித்திருந்தனர். ‘புஷ்பா 2’ இப்போது இந்திய சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனைகள் எட்டியுள்ள படம் ஆகிவிட்டது. தற்போதுள்ள நிலவரப்படி, இப்படம் ரூ. 1,705 கோடி வரையில் வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த மாபெரும் வெற்றியின் பின்னர், அல்லு அர்ஜுன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை தயாரிப்பாளர் சூரிய தேவர நாக வம்சி வெளியிட்டுள்ளார். இந்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பு ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. சூரிய தேவர் நாக வம்சி, இந்த படத்தைப் பற்றி கூறும்போது, “திரி விக்ரம் சார் இதுவரை யாரும் செய்யாத ஒரு புதிய முயற்சியுடன் அல்லு அர்ஜுனை வைத்து இந்த படத்தை உருவாக்கப் போகிறார். ராஜமவுலி சார் கூட இதுவரை இதுபோன்றதை முயற்சிக்கவில்லை. இந்த படம் வெற்றி பெற்றால், இந்திய சினிமாவில் எளிதில் பார்க்க முடியாத ஒரு விஷயத்தை பார்வையாளர்கள் பார்ப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.


அல்லு அர்ஜுன் மற்றும் திரி விக்ரம் ஆகியோரின் கூட்டணி பல வெற்றிப் படங்களை தந்துள்ளது. இதற்கு முன் இருவரின் கூட்டணியில் வெளியான ‘ஜுலாய்’, ‘சன் ஆப் சத்யமூர்த்தி’, மற்றும் ‘வைகுண்டபுரம்’ படங்கள் ரசிகர்களிடம் பெரும் வெற்றியையும் பாராட்டையும் பெற்றன. இதனால், இந்த புதிய கூட்டணி பார்வையாளர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


‘புஷ்பா 2’ வெற்றியின்போது, அல்லு அர்ஜுன், ஒரு புதிய கதை மற்றும் புதிய பார்வையில் நடிக்க உருவான இந்த அடுத்த படம், அவரது ரசிகர்களுக்கும் பொது சினிமா ரசிகர்களுக்கும் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘புஷ்பா 2’ இப்போது இந்திய சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனைகள் எட்டியுள்ள படம் ஆகிவிட்டது.

அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தைப் பற்றி தயாரிப்பாளர் வெளியிட்ட புதிய அறிவிப்பு