2021-ம் ஆண்டில் வெளியான 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படம், சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுனின் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக தற்போது 'புஷ்பா 2 தி ரூல்' படம் வெளியானது.
இந்த படமும் வசூல் மற்றும் விமர்சனம் ரீதியில் மிகுந்த சாதனைகளை படைத்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் சாம் சி எஸ் இசையமைத்தனர்.
இந்தப் படம் வெளியான 6 நாட்களில் மட்டுமே ரூ.1,000 கோடியை கடந்து, தற்போது ரூ.1,409 கோடி வசூல் செய்துள்ளது.
இப்படம் ஜனவரி 9-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


