நடிகை ஸ்ரீலீலா, தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகையாக வளர்ந்து வருகின்றார். மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் இடம்பெற்ற பாடலின் மூலம் புகழடைந்த அவர், தற்போது புஷ்பா 2 படத்தில் "கிஸ்ஸிக்" என்ற சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடி இந்திய அளவில் பிரபலமானார். இந்த பாடல் வைரலானதுடன், பாலிவுட்டில் அவர் அறிமுகமாக இருப்பது குறித்த செய்திகளும் வெளியாகின.
இந்நிலையில், நடிகர் ராணா டகுபதியின் 'தி ராணா டகுபதி ஷோ'வில் கலந்துகொண்ட ஸ்ரீலீலா, தனது பாலிவுட் அறிமுகத்தை உறுதி செய்தார். இதுகுறித்து அவர், "ஆம், அது உண்மைதான். பாலிவுட்டில் நான் நடிக்கும் முதல் படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
தற்போது, ஸ்ரீலீலா நிதின் கதாநாயகனாக நடித்துள்ள ராபின்ஹுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெங்கி குடுமுலா எழுதி இயக்கிய இப்படம் வரும் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


