2021-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற "புஷ்பா தி ரைஸ்" படத்தின் பின்பு, தற்போது "புஷ்பா 2: தி ரூல்" படம் வெளியாகி, இதுவரை ரூ.621 கோடி வசூல் செய்துள்ளது. இதில், அல்லு அர்ஜுன் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து, ராஷ்மிகா மந்தனா ஸ்ரீ வள்ளி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீ வள்ளி தனது இரண்டாவது அடையாளமாகி விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஸ்ரீ வள்ளி என் இரண்டாவது அடையாளமாகிவிட்டார், இது எனக்கு ஆச்சரியமாகவும் பெருமையாகவும் உள்ளது. ஸ்ரீ வள்ளியை எனக்கு கொடுத்து, இந்த நிலைக்கு என்னை கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சுகுமார். அதற்காக அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். புஷ்பா இல்லாமல் ஸ்ரீ வள்ளி இல்லை. அதற்காக அல்லு அர்ஜுனுக்கு என் இதயத்தில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் பொறுத்தவரை, ஸ்ரீ வள்ளி வெறும் கதாபாத்திரம் அல்ல. அவரை உண்மையாக உணர்கிறேன்" என தெரிவித்துள்ளார்.


