புஷ்பா 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் அல்லு அர்ஜுன் அடுத்ததாக இயக்குனர் திரி விக்ரம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் 2025 மார்ச் மாதம் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்களுக்காக அல்லு அர்ஜுன் மற்ற எந்த படத்தில் நடிக்காமல் இருந்தார், ஆனால் இவை இரண்டும் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றுள்ளன. குறிப்பாக, புஷ்பா 2 படத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் 1000 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இந்த வெற்றியின் பின்னர், மக்கள் அல்லு அர்ஜுன் அடுத்தப்படியாக எந்த படத்தில் நடிப்பார் என்று பெரிதும் எதிர்பார்த்தனர். இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர் திரி விக்ரம் இந்த புதிய படத்தை இயக்கவுள்ளார். இவர்கள் இருவரும் முன்னதாக "ஜூலாய்", "சன் ஆஃப் சத்யமூர்த்தி" மற்றும் "ஆல் வைகுண்டபுரம்லோ" போன்ற வெற்றிப் படங்களை இணைந்து இயக்கியுள்ளார்.
இந்த புதிய படம் பான் இந்தியா பிரச்சாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி கூறியபடி, ““ரசிகர்களின் கற்பனைக்கு எட்டாத வகையில் அல்லு அர்ஜுன் திரி விக்ரம் இணையம் படம் அமையும். இது போன்ற படத்தை இந்திய சினிமாவில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்” என எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளார்.


