1990-ம் ஆண்டு நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த நரி நரி நடுமா முராரி திரைப்படம், தெலுங்கு சினிமாவின் வரலாற்றில் மறக்கமுடியாத படமாக உள்ளது. இந்நிலையில், அந்த பெயரை நடிகர் ஷர்வானந்தின் 37வது படத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.
நரி நரி நடுமா முராரி படத்தின் முதல் பார்வை போஸ்டரை நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் ராம் சரண் வெளியிட்டுள்ளனர், இது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த படத்தை சமாஜவரகமனா புகழ் ராம் அப்பாராஜு இயக்க, ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ராமபிரம்மம் சுங்கரா தயாரிக்கிறார். சம்யுக்தா மற்றும் சாக்சி வைத்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் ரசிகர்கள் இப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.


