தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ், பாகுபலி படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் பிரபலமானார். அதன் பிறகு சலார் மற்றும் கல்கி 2898 ஏ.டி படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றன. தற்போது, பிரபாஸ் மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி வகையில் உருவாகும் தி ராஜா சாப் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா தயாரிக்கின்றன. இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று, 80% படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தி ராஜா சாப் படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டின் போது வெளியாகும் என சில ஊகங்கள் பரவியுள்ளன. இதற்குப் பதிலாக, பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பில் கூறியுள்ளதாவது, "இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். சரியான நேரத்தில் அதிகாரபூர்வ அப்டேட்டுகளை வழங்குவோம். படத்தின் டீசர் விரைவில் வெளியாகும்" என தெரிவித்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வர உள்ளது.


