தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள "கேம் சேஞ்சர்" திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில், ராம் சரண் ஊழலுக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும், இவர் அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படம், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி, கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் டல்லாஸில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக புஷ்பா பட இயக்குனர் சுகுமார் கலந்து கொண்டார். அவர் தனது பேச்சில், "நான் உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லப் போகிறேன். 'கேம் சேஞ்சர்' படத்தை சிரஞ்சீவி சாருடன் பார்த்தேன். இதற்கு முதல் விமர்சனம் கொடுக்க விரும்புகிறேன்.
முதல் பாதி, அருமை. இடைவேளை, பிளாக்பஸ்டர். என்னை நம்புங்கள். இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் காட்சி எனக்கு ஆச்சரியத்தை அளித்தது" எனக் கூறினார்.
புஷ்பா இயக்குனரின் பாராட்டும், ஷங்கரின் மாஸ் இயக்கமும் இணையும் இந்த படம் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. "கேம் சேஞ்சர்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என திரையுலகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.


