°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
'கேம் சேஞ்சர்': 4-வது பாடலின் புரொமோ வீடியோ வெளியீடு.
Telugu

'கேம் சேஞ்சர்': 4-வது பாடலின் புரொமோ வீடியோ வெளியீடு.

0.0 views
Text Size:

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் புதிய திரைப்படமான கேம் சேஞ்சர் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் புதிய திரைப்படமான கேம் சேஞ்சர் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தில் ராம் சரண், ஊழல் அமைப்புக்கு எதிராக போராடி நீதியை நிலைநாட்டும் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். மேலும், இப்படத்தில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கும் ராம் சரணின் கதாபாத்திரம் மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கியுள்ளது.


கியாரா அத்வானி கதாநாயகியாக, மற்றும் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.


இந்தப் படத்தின் டீசர் மற்றும் மூன்றாவது பாடல்கள் வெளியானதும் வைரலாகி, படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. சமீபத்தில், இப்படத்தின் 4-வது பாடலான 'தூப்' பாடலின் புரொமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் வரும் 22-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கேம் சேஞ்சர் திரைப்படம், பொங்கல் அன்று, ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேம் சேஞ்சர் திரைப்படம், பொங்கல் அன்று, ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'கேம் சேஞ்சர்': 4-வது பாடலின் புரொமோ வீடியோ வெளியீடு.