தெலுங்கு சினிமாவில் புதிய தலைமுறை நடிகர்களில் ஒருவராக திகழும் கிரண் அப்பாவரம், தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களிடம் தனக்கென்று ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். 2019-ம் ஆண்டு வெளியான ராஜா வாரு ராணி காரு திரைப்படம் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய கிரண், தொடர்ந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளியான கா திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து, அவர் தற்போது தில்ருபா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை புதுமுக இயக்குநர் விஸ்வா கருண் இயக்கி, ருக்சார் தில்லான் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், ரவி, ஜோஜோ ஜோஸ், ராகேஷ் ரெட்டி மற்றும் சரேகாமா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். காதலர் தினத்தை முன்னிட்டு, இந்த படம் அடுத்த மாதம் 14-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலர்கள் மத்தியில் இப்படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


