வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூவின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். தில் ராஜூ, விஜய் நடித்த வாரிசு மற்றும் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் போன்ற படங்களை தயாரித்துள்ளார். இந்த சோதனைகள் ஹைதராபாத்தில் உள்ள 8 இடங்களில் நடைபெற்று வருகின்றன, அதில் தில் ராஜூவின் வீடு மற்றும் அலுவலகம் அடங்கும். அவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அண்மையில், தில் ராஜூ தெலுங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டு கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், குட் பேட் அக்லி (அஜித்) மற்றும் புஷ்பா 2 (அல்லு அர்ஜுன்) போன்ற படங்களின் தயாரிப்பு நிறுவன நிர்வாகிகளின் இல்லங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றது. மைத்ரி நவீனுக்கு சொந்தமான இடங்களிலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செர்ரியின் வீடுகளிலும் ஆய்வு நடைபெற்று வருகிறது. பஞ்சாரா ஹில்ஸ் மற்றும் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அதிகாலை முதல் இந்த சோதனைகள் நடைபெற்று வருகின்றன.


