°C
Air:
GOLD—
SILVER—
USD—
EUR—
GBP—
ஹேமமாலினிக்கு 'உஸ்தாத் குலாம் முஸ்தபா கான்' விருது வழங்கி மரியாதை.
HINDI

ஹேமமாலினிக்கு 'உஸ்தாத் குலாம் முஸ்தபா கான்' விருது வழங்கி மரியாதை.

0.0 views
Text Size:

இந்த விழாவில் மஹாராஷ்டிரா மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் ஆஷிஷ் ஷெலார் முன்னிலையில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர், மகள் சாரா டெண்டுல்கர், இயக்குனர் ஹன்சல் மேத்தா, நடிகர்கள் ஷரத் கேல்கர், கீர்த்தி கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

பாரம்பரிய ஹிந்துஸ்தானி இசைக் கலைஞரான உஸ்தாத் குலாம் முஸ்தபா கான், ஆஷா போஸ்லே, ஏ.ஆர். ரகுமான், சோனு நிகம், ஹரிஹரன், ஷான், ஷில்பா ராவ் உள்ளிட்ட பல இசை பிரபலங்களுக்கு குருவாகத் திகழ்ந்தவர். இவரது கலை சேவையை பாராட்டி பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், சங்கீத நாடக அகாதெமி விருது போன்ற பல உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார். அவரது நினைவு நாளை ஒட்டி, மும்பையில் ஒவ்வொரு வருடமும் 'ஹாஸ்ரி' இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.


இந்த ஆண்டு, மும்பையின் பாந்த்ராவில் உள்ள 'ஜியோ' பன்னாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நடிகை ஹேமமாலினிக்கு 'பத்ம விபூஷன் உஸ்தாத் குலாம் முஸ்தபா கான்' விருது வழங்கப்பட்டது. இந்த விருது, இந்திய கலை மற்றும் கலாசாரத்தில் அவரது அசற்றாத பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வழங்கினார்.


இந்த விழாவில் மஹாராஷ்டிரா மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் ஆஷிஷ் ஷெலார் முன்னிலையில், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர், மகள் சாரா டெண்டுல்கர், இயக்குனர் ஹன்சல் மேத்தா, நடிகர்கள் ஷரத் கேல்கர், கீர்த்தி கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.

இவரது கலை சேவையை பாராட்டி பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், சங்கீத நாடக அகாதெமி விருது போன்ற பல உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளார்.