'சாவா' படம், மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவாக நடிக்க, நடிகை ராஷ்மிகா மந்தனா சம்பாஜியின் மனைவி மகாராணி ஏசுபாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் அக்சய் கண்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலாகி, படக்குழு நாளை டிரெய்லரை வெளியிடுமென அறிவித்துள்ளது. அதே நேரத்தில், விக்கி கவுசல் கதாபாத்திரத்தின் போஸ்டர்களின் பின், தற்போது ராஷ்மிகா மந்தனாவின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படம் அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாக உள்ளது.


