விக்ராந்த் மாஸ்ஸி, பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். 2017 இல் வெளியான 'எ டெத் இன் தி கஞ்ச்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், அதன் பிறகு 'ஜின்னி வெட்ஸ் சன்னி', 'ஹசீன் தில்ருபா', 'லவ் ஹாஸ்டல்' மற்றும் 12-த் பெயில் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில், அவர் நடிப்பில் வெளியான 'தி சபர்மதி ரிப்போர்ட்' திரைப்படம், 2002-ம் ஆண்டு நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு, பெரும்பாலான அரசியல் தலைவர்களிடமிருந்து பாராட்டுகளை பெற்றது. இந்த வெற்றியின் பின்னர், விக்ராந்த் மாஸ்ஸி, 'யார் ஜிக்ரி' மற்றும் 'ஆன்கோன் கி குஸ்தாகியான்' என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இப்போது, இந்த படத்தின் இயக்குனர் சந்தோஷ் சிங், விக்ராந்தின் முடிவைப் பற்றி கருத்து தெரிவித்து, "நீங்கள் ஒரு முக்கிய கட்டத்தையும் முழுமையையும் அடைந்தபின், சில சமயங்களில் வேகத்தை குறைத்து, பாதையை மாற்ற வேண்டும் என உணர்வீர்கள். நடிகர்கள் 24 மணி நேரமும் வேலை செய்கிறார்கள். அவர்களின் தொடர்ச்சியான பிஸியான வாழ்க்கை சில நேரங்களில் வேகத்தை குறைப்பதற்கு உந்துதலாக அமைகின்றது," என்று கூறியுள்ளார்.
விக்ராந்த் மாஸ்ஸியின் இந்த முடிவால் சினிமா உலகில் புதிய கோணத்தை நோக்கி அவர் பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


